25th December 2021 08:58:33 Hours
அக்கராயன்குளம் 652 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரியின் ஒருங்கிணைப்பில் நன்கொடையாளர்களான திரு எரங்க ஜயகொடி மற்றும் திருமதி முன்ஷா முஷ்டாக் ஆகியோரின் நிதி உதவியில் விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 53 வறிய மாணவர்களுக்கு திங்கட்கிழமை (20) கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 652 வது பிரிகேடின் 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி மாணவர்களுக்கான விநியோகிப்பட்ட பொதிகளில் புத்தக பைகள், காலுறைகள், காலணிகள், தண்ணீர் போத்தல்கள், உணவுப் பெட்டிகள், அப்பியாச புத்தகங்கள், பேனாக்கள் போன்ற பொருட்கள் உள்ளடங்கியிருந்ததோடு ஒரு பொதிக்கு தலா 4,500.00 ரூபாய் என்ற அடிப்படையில் நன்கொடையாளர்களால் இத்திட்டத்திற்காக 238,500.00 ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளை பிரதேசத்தின் பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையிலுமாக இத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.