07th October 2021 08:30:04 Hours
சிவில் சமூகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான நல்லிணக்க தொடர்புகளை ஊக்குவிக்கும் விதமாக 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் அக்கறைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் 10 குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தை திங்கட்கிழமை (4) முன்னெடுத்தனர்.
அப்பகுதிகளில் அதிகரித்து காணப்படும் தொற்றுநோய் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பிஸ்கட், சீனி உள்ளடங்கிய நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்களின் மேற்பார்வையில் 241 வது பிரிகேட் தளபதி கேணல் அபேகோன் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவர் படையணியின் கட்டளை அதிகாரி டபிள்யூஜீஎன்டி வீரசிங்க ஆகியோரால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
அதேநேரம் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் அக்கறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறுகின்ற 1250 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை (01) உள்நாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.
24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்களின் மேற்பார்வையில் 241 வது பிரிகேட் தளபதி கேணல் அபேகோன் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவர் படையணியின் கட்டளை அதிகாரி டபிள்யூஜீஎன்டி வீரசிங்க ஆகியோரால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மனிதானபிமான திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 11 வது தேசிய பாதுகாவலர் படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபை முதல்வர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.