Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2021 19:37:15 Hours

நன்கொடையாளர்களிடம் இருந்து குருதி அழுத்த கண்காணிப்பு திரை நன்கொடை

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கொவிட்-19 வார்டின் உயர் சார்பு பிரிவுக்கு (HDU) சுமார் 1.5 மில்லியன் மதிப்புள்ள 6 பல்வகைமை குருதி அழுத்த கண்காணிப்பு திரைகள நன்கொடையாக வெள்ளிக்கிழமை (4) வழங்கப்பட்டன.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அந்த கண்காணிப்பாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு திருமதி துசிதா குமாரகுளசிங்கம் தனது விஷாகா வித்தியாலய 1979 ஆம் ஆண்டு வகுப்பு நண்பர்கள் மற்றும் சன்ஷைன் பார்மா ஆகியோருடன் இணைந்து மேற்படி நன்கொடையினை வழங்கினார். கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கதிரியக்க வைத்திய நிபுணர் பிரிகேடியர் (வைத்தியர்) தில்ருக்ஷி முனசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பில் குறித்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நன்கொடை கொழும்பு இராணுவ வைத்தியச்சாலையின் பணிப்பாளர் கர்ணல் சம்பக அத்தநாயக்க, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் லெப்டினன்ட் கேணல் டாக்டர் சம்பிக அபேசிங்க ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.