Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2020 23:24:07 Hours

நன்கொடையாளரினால் இராணுவ வைத்தியசாலைக்கு முககவசங்கள் வழங்கி வைப்பு

கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் இராணுவத்தின் அர்ப்பணிப்பு சேவைகளை கௌரவிக்கும் முகமாக அட்லஷ் அக்‌ஷிலா ஹேமாஷ் குரூப் மற்றும் ஹேமாஷ் மருந்து கம்பனியினால் இராணுவ வைத்தியசாலைக்கு 100,000 முககவசங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நன்கொடை பொருட்கள் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், மருத்துவ படையணியின் படைத் தளபதியுமான பிரிகேடியர் பி.ஏ.சி பெர்ணாண்டோ அவர்களுக்கு இந்த மருத்துவ கம்பனியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் டி.வி.பி காரியவசம், கொழும்பு இராணுவ மருத்துவமனை பணிப்பாளர் கேர்ணல் ஏ.எம்.சி அத்தநாயக்க, இராணுவ மருத்துவ கொள்முதல் சேவைகள் பணிப்பாளர் கேர்ணல் டபிள்யூ.எச்.யூ.டி விஜயரத்ன மற்றும் ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர் லெப்டினன்ட் கேணல் சி.எஸ் அபேசிங்க போன்றோர் இச்சந்தர்ப்பத்தில் இணைந்திருந்தனர்.

ஹேமாஸ் மருந்துகள் மற்றும் தளவாடங்கள் நிர்வாக பணிப்பாளர் எம்.எஸ். கஸ்தூரி செல்லராஜா வில்சன், அட்லஸ் ஆக்சிலியா, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், நிர்வாக பணிப்பாளர் திரு அசிதா சமரவீர, விநியோக சங்கிலி பொது மேலாளர் திருமதி தில்மினி வேரகம, அட்லஸ் ஆக்சிலியா, ஹேமாஸ் குழுமம், திரு நிசங்க அசித மருந்துகள், திரு விராஜ் ஜெயசூரியா, பணிப்பாளர் உற்பத்தி, அட்லஷ் அக்‌ஷிலா ஹேமாஷ் குரூப் மற்றும் ஹேமாஷ் மருந்து கம்பனியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நன்கொடை நிகழ்வில் இந்த அதிகாரிகள் இனைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp