Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2019 11:23:46 Hours

நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு

யாழ் குடாநாட்டில் நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படையினரால் (24) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் பாடசாலை மாணவர்களுக்கு 100 சைக்கிள்களும், பல குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நன்கொடையானது அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'லிமிடெட் பிராண்ட்ஸ் மாஸ்ட் கேரிஸ் டீம்' க்கான அலுவலகமான 'மாஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் பா ஈஸ்ட் லிமிடெட்' நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.

இந்த நன்கொடை திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிக சூரிய அவர்களின் வழிக்காட்டுதலின் பேரில் யாழ் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி உட்பட யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் யாழ் மாவட்ட பேராயர் கலாநிதி ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கத்தோலிக்க பாதிரியார்கள், 51 மற்றும் 52 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதிகள் மற்றும் பிரிகேடியர் நிர்வாக விடுதியின் சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் உட்பட பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். Running Sneakers | adidas Campus 80s South Park Towelie - GZ9177