Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2021 16:54:42 Hours

நட்டாங்கண்டல் கிராம மக்களுக்கு தொற்றுநோய் தொடர்பாக அறிவூட்டல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 652வது பிரிகேட்டின் 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் நட்டாங்கண்டல் கிராம மக்களுக்கு கொவிட் -19 தொற்றுநோய் பரவுதல் மற்றும் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சனிக்கிழமை (1) தெளிவூட்டினர்.

பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய ஹேரத் அவர்களின் வழிக்காட்டலில் படையினர் மிகக் கஸ்ட பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.