Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2021 15:22:40 Hours

நகராட்சி மன்ற கட்டிடத்தில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய இடை நிலை பராமரிப்பு மையம் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது

நுவரெலியாவில் உள்ள 112 வது பிரிகேட் மற்றும் 3 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால், பிரதேசத்தின் கொவிட்-19 தொற்று நோய் எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் பயன்படுத்தும் முகமாக நுவரெலியாவில் உள்ள நகராட்சி மன்ற கட்டிடத்தில் மாற்றியமைக்கப்பட்ட இடை நிலை பராமரிப்பு மையத்தை திங்கட்கிழமை (17) அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

படையினரால் 4 நாட்களுக்குள் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இக் கட்டிடத்தை மாற்றியமைத்தனர்.

இந்த சுகாதார பராமரிப்பு மையம் 500 படுக்கைகள் கொண்டதுடன் நுவரெலியா மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியவர்களின் ஒருங்கிணைப்புடன் நுரெலியா மேயர், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இந்த இடை நிலை பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டது.

நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவ ஆகியோரின் வழிகாட்டுதலுக்கமைய படையினரால் இந்த திட்டம் மேற் கொள்ளப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனைத்து படையணிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அதன் சீரான செயல்பாட்டிற்கு தேவையான படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள், கட்டில் விரிப்பு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

இந்த இடை நிலை பராமரிப்பு மையமானது கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 11 வது படைப் பிரிவு மற்றும் 112 வது பிரிகேட் தளபதிகளின் ஒருங்கிணைப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

நுவரெலியாவில் உள்ள 3 ஆவது சிங்க படையணியின் படையினரால் இடை நிலை பராமரிப்பு மையத்துக்கு தேவையான அனைத்து மின் மற்றும் வயரிங் தேவைகள் நிவர்த்திசெய்யப்பட்டன.

இந்த கையளிப்பு நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் நுவரெலியவா மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவ , நுவரெலியா, நுவரெலியா மேயர், பிராந்திய பொறியியலாளர் டொக்டர் மதுர செனவிரத்ன, சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.