26th March 2025 10:09:27 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள், 2025 மார்ச் 25 ஆம் திகதி ஒருகொடவத்தை இலங்கை கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தகுதிக்கான தொழில்நுட்ப முகாமைத்துவ பாடநெறியை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். இலங்கை கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆறு மாத பாடநெறி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது..
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்..