Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 10:50:50 Hours

தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கொவிட் -19 யை கட்டுப்படுத்த ஒருமித்த ஆதரவின் மதிப்பு தொடர்பில் எடுத்துரைப்பு

நேற்றிரவு (23) 'ஸ்வர்ணவாஹினி' தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட 'இர ஹரி கெலின்' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குகொண்ட பாதுகாப்புபதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட் -19 பரவல், கட்டுப்பாடு மற்றும் இராணுவத்தின் பங்கு" என்ற தலைப்பில் கருத்து தெரிவித்தார். இதன்போது இதில் பரந்த அளவிலான பிரச்சினைகள், சிக்கல்கள் மற்றும் புதுப்பிப்புகள் மற்றும் மதிப்பாய்வு தொடரபாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் தற்போதைய நிலை, ஜனாதிபதியின் பார்வை மற்றும் இராணுவ பங்களிப்பு, தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மற்றும் அதன் இறுதி முடிவுகள், இராணுவத்தின் தற்போதைய தேசிய தடுப்பூசி வழங்கலுக்கான ஒத்துழைப்பு மற்றும் அதன் எதிர்கால உத்திகள், இந்த தேசிய பேரழிவையும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு ,அனைவரினதும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் மதிப்பு. தேசிய அபிலாஷைகளை அடைவதற்கான ஆதரவு முதலியனவற்றை மையமாகக் கொண்டும் விவாதிக்கப்பட்டது. இதன் முழுமையான வீடியோ பின்வருமாறு;