06th June 2021 15:34:25 Hours
நொப்கோவில் உள்ள பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களின் வழக்கமான மீள் ஆய்வுக் கூட்டமானது வெள்ளிக்கிழமை (4) ராஜகிரிய நொப்கோவில் நடைபெற்றது.
நொப்கோ தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் கொவிட் -19 கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதோடு, அதனுடன் தொடர்புடைய தகவல்கள் மீண்டும் பார்வையிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டன.
ஜெனரல் ஷவேந்திர சில்வா,தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 ஆக உயர்வடைந்ததற்கான காரணங்களை விளக்கினார், மேலும் அந்த்தொற்றாளர்களில் அனேகமானவர்கள் முன்னர் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் , சமூகத்திலிருந்து கண்டறியப்பட்ட புதிய தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். புதிய தொற்றுக்களை கண்டறிதல், அவற்றின் நடத்தை மற்றும் சமூகத்தில் அதன் பரவும் விதம் தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.
அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளைத் தயாரிப்பதற்கு முன்கூட்டியே தொற்றுக்களை சரியாகக் கண்டறியும் பொருட்டு தற்போதைய பி.சி.ஆர் செயற்பாடு மற்றும் அதனை ஒரு மூலோபாய வடிவத்தில் கொண்டுவருவதன் அவசியம் தொடர்பாகவும் நொப்கோ தலைவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் அதன் தனிமைப்படுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அந்தந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரான அதிமேதகு ஜனாதிபதியின் தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடுகளுக்கான முடிவானது, சுகாதார வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் நாங்கள் தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே நன்மை பயக்கும் என கூறினார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி நடமாடும் வாகனங்கள் மற்றும் சிறிய விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்கள் போன்றவற்றை விநியோகிப்பது குறித்து பேசிய அவர், இந்த கடினமான காலங்களில் இதுபோன்ற சேவைகள் பொதுமக்களுக்கு பெரிய அளவில் உதவியதுடன், சிறிய அளவிலான வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவியது.
உணவுப் பொருட்களை அனுப்புவதற்கான மாவட்ட செயலக மட்டங்களில் அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையானது மிகவும் சிரமமின்றி சீராக இயங்குவதாகவும், வீதித் தடைகள் போன்றவற்றில் வசதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைவாக தடுப்பூசி செயல்முறை 9 மாவட்டங்களில் தொடரும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் , கர்ப்பிணி பெண்கள், சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் ஜூன் 8 முதல் 12 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சினோபாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. "ஜூன் 6 ஆம் திகதி (1 மீ) மற்றும் ஜூன் 9 ஆம் திகதி (1 மீ) மொத்தமாக 2 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளைப் நாங்கள் பெறுகிறோம்.
சுகாதார அதிகாரிகள், பல்கலைக்கழக வேந்தர்கள் , பொருளாதார வல்லுநர்கள், கூட்டு ஆடைத் துறையின் பிரதிநிதிகள், சுதந்திர வர்த்தக வலயம், தோட்டங்கள், கல்வி மற்றும் உயர் கல்வி, தனியார் வங்கி, பொது போக்குவரத்து போன்ற துறைகளின் செயல்பட்டிற்கு அதிக சந்தர்பம் தேவைப்படுவதால் அவர்களுடன் இணைந்து மேலதிக எதிர்கால உத்திகள் திட்டமிடப்படும் , ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இராணுவத் தளபதி வெளிநாட்டினரின் வருகை பற்றிய விவரங்களையும் சுருக்கமாகக் கூறினார், இது தினசரி சுமார் 1000 ஆகும்.
இன்று மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர 18 விமானங்கள் வருகின்றன. நாங்கள் ஜப்பான், துருக்கி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகளை வரவழைத்து அவர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் முறையை செயல்படுத்துகிறோம்.
இதற்கிடையில், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிடுகையில்,ஒரு ஸ்டிக்கர் முறையிலான நகரங்களுக்குள் நுழைவதற்கான தற்போதைய முறை மற்றும் இது தொடர்பாக பொலிஸாரினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகியவற்றை விளக்கினார். கலந்து கொண்ட மற்ற பங்குதாரர்களும் கூட்டத்தின் போது தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.