Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2021 22:23:28 Hours

தொம்பேமடையில் பாதிக்கப்பட்டவர்கள் 8 வது சிங்கப் படையணியினரால் மீட்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 611 வது பிரிகேடின் 8 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் இன்று (9) அதிகாலை 4.30 மணியளவில் தொம்பேமட, ரம்புக்கனையை சென்றடைந்திருந்ததோடு, அதிக மழைக்காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்ட வீட்டிற்குள் சிக்கிகொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை மீட்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

கேகாலையில் நிலைகொண்டிருந்த படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, 2 அதிகாரிகள் உட்பட 32 சிப்பாய்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மழைக் காரணமாக நிரம்பியிருந்த வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான வழிகளை ஏற்படுத்தியதோடு, சரிந்து கிடந்த மண் மேடுகளை அகற்றி மீட்பு பணிகளில் துணிச்சலோடு ஈடுபட்டனர்.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நான்கு குடும்ப உறுப்பினர்களையும் மீ்ட்டெடுத்த படையினர் அவர்களை இராணுவத்தின் வாகனங்களைப் பயன்படுத்தி அருகிலுள்ள ரம்புக்கனை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்தனர்.

எவ்வாறாயினும், இக்குடும்பத்தில் பலத்த காயமடைந்திருந்த தாயாரான திருமதி சுரங்கிகா லக்மாலி (36) மற்றும் அவரது மகள்களான, கசுனி பாக்யா (8) மற்றும் மதுஷி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையிலும் உயிரிழந்திருந்தாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், படுகாயமடைந்த தந்தையான சுதத் மாரசிங்க (46) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்படி சம்பம் தொடர்பில் அறிவிக்கப்பட்ட மாத்திரத்திலேயே, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 611 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனாக்க உடுவோவிட்ட, 8 வது இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரி லெப்டினண் கேணல் கே.அத்துகோரல ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய சிப்பாய்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.