Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2024 19:48:46 Hours

தொப்பிகலையில் ஆதரவற்ற குடும்பத்தின் புதிய வீட்டிற்கான அடிக்கல்

12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி அவர்கள் ஜனவரி 26 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுருக்கமான விழாவின் போது தொப்பிகல ஈரலக்குளம் ஆதரவற்ற குடும்பத்திற்கான புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் ஆசிர்வாதத்துடன், 23 வது காலாட் படைப்பிரிவின் 12 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியினரால் இதன் கட்டுமானத்திற்குத் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் தாராள மனப்பான்மையுள்ள அனுசரனையாளர்கள் இந்த பணிக்கான நிதிப் பங்களிப்பை வழங்கினர்.