Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2021 15:30:20 Hours

தொண்டர் படை சிப்பாய்கள் தரவரிசை நில அளவீட்டில் தகுதி

இலங்கை பீரங்கி படையின் (எஸ்.எல்.ஏ) ஆறு சிப்பாய்களும் இலங்கை பொறியியலாளர் படையின் (எஸ்.எல்.இ) மூன்று சிப்பாய்களும் இலங்கையில் ஒட்டோ கேட் மூலம் நவீன நிலைய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கணினி உதவி அளவீட்டு வரைவைப் பயன்படுத்தி முப்பரிமான நில அளவீடு பயிற்சி பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழ்கள் கொஸ்கம இராணுவ தொண்டர் படையணி (எஸ்.எல்.ஏ.வி.எஃப்) தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 55 ஏக்கர் கொண்ட தொண்டர் படை காணியினை அளவீடு செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த 4 வது இலங்கை பொறியியலாளர் படையின் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிலயளவையாளர் கேப்டன் WAHJW சில்வாவின் வழிகாட்டுதல் 2021 ஜூன் மாதம் 20 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாடநெறி 2021 ஜூலை மாதம் 12 ம் திகதி நிறைவுபெற்றது.

முழு பயிற்சியினையும் பதிவுசெய்யப்பட்ட உரிமம் பெற்ற நிலயளவையாளர் கேப்டன் W.A.H.J.W சில்வா அவர்களால் நடத்தப்பட்டது மற்றும் பயிற்சி நிலயளவையாளர்கள் தொண்டர் படையணி காணியின் நிலயளவை திட்டத்தை மிக நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக முடித்தனர்.

ஒரு சுருக்கமான விழாவின் போது நிலயளவையாளர் குழுவுக்கு சான்றிதழ்களை தொண்ர் படையணித் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட வழங்கினார், இதில் பயிற்சியாளர்கள் தங்கள் தொழில் மேம்பாட்டை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பணியை நிறைவேற்றியதற்காக நன்றி பாராட்டினர்.

தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்கவும் சான்றிதழ்களை வழங்குவதில் கலந்து கொண்டார். நிகழ்வில் கொவிட் - 19 சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து தொண்டர் படையணி சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.