Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2020 12:28:25 Hours

தொண்டர் படைத் தலைமையக படையினர் முன்னாள் தளபதிக்கு கௌரவ மரியாதை

இம் மாதம் (27) ஆம் திகதி கொஸ்கமவில் அமைந்துள்ள தொண்டர் படையணி தலைமையகத்தில் முன்னாள் தொண்டர் படையணியின் படைத் தளபதியும், பதவிநிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொண்டர் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களை தொண்டர் படைத் தலைமையகத்தின் பிரதம பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் கித்சிறி லியனகே மற்றும், பதவிநிலை நிர்வாக பிரதானி பிரிகேடியர் கிரிஷ்டி ஜயசிங்க போன்ற அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் பதவிநிலை பிரதானி அவர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

பின்னர் பதவி நிலை பிரதானி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ மூத்த அதிகாரிகள் பதவிநிலை பிரதானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். Asics shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ