30th November 2023 10:16:34 Hours
தொம்பே, இந்தோலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28) சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
இந்த வீடு இறந்த இராணுவ வீரரின் மனைவியான திருமதி சஞ்சலாசாந்தனிக்கு வழங்கப்படவுள்ளது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. லயன்ஸ் கழகம் இந்த கட்டுமானத்திற்கான நிதி உதவியை வழங்கியது.
வீட்டின் முழு நிர்மாணப் பணிகளும் இராணுவத்தினரால் பூர்த்தி செய்யப்படும்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், திரு.பந்தக தாபரே மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.