Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2021 17:45:05 Hours

தேவையுடைய குடும்பங்களுக்கு இலவச மரகறிகள் வழங்கல்

வட்டுவாக்கல், செல்வபுரம், உன்னபிலவு, வண்ணாங்குளம், கல்லாப்பாடு-தெற்கு, சிலாவத்தை-தெற்கு மற்றும் வீதிகரை கிராமம் என்பவற்றின் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில் 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பி.டி.சூரியபண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செவ்வாய்க்கிழமை (1) இலவசமாக மரக்கறிகளை பகிர்ந்தளிக்கப்பட்டது.

591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான அந்த வகை மரக்கறி வகைகளை தனது படையினருடன் சேகரித்துக் கொண்டார்.

12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி, 24 வது இலங்கை சிங்கப் படை கட்டளை அதிகாரி, கரைத்துரைபற்று பிரதேச செயலாளர் மற்றும் சில அரச அதிகாரிகள் விநியோக திட்டத்தில் கலந்து கொண்டனர்.