Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தேர்வு போட்டிகளில் இராணுவ பளு தூக்கும் வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுடன் பிரகாசிப்பு

தேசிய பளு தூக்கும் அணிக்கான பளு தூக்கும் வீரர்களை தெரிவ செய்யும் போட்டிகள் பொலன்னறுவையில் உள்ள பளு தூக்கும் உடற்பயிற்சி கூடத்தில் டிசம்பர் 20-21 ம் திகதிகளில் நடைப்பெற்றது. இதில் கடற்படை, விமானப்படை, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, கண்டி, குருநாகல், காலி மற்றும் கல்கமுவ விளையாட்டுக் கழகங்கள் சார்பில் ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டியிட்ட வீரர்களை வீழ்த்தி இராணுவ பளு தூக்கும் வீரர்கள் 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.

பதக்கம் பெற்றவர்கள் விவரங்கள் வருமாறு,

தங்கப் பதக்கம் - 109 கிகி எடைப்பிரிவு சார்ஜண்ட் ஏஜீஎஸ் அபேவிக்கிரம

தங்கப் பதக்கம் - 71 கிகி எடைப்பிரிவு சாதாரண சிப்பாய் எச்எச்கே உதேஷிகா

வௌ்ளி பதக்கம் 81 கிகி எடைப்பிரிவு பீரங்கி சிப்பாய் எச்ஆர்ஜே விஜேரத்ன

வௌ்ளி பதக்கம் 96 கிகி எடைப்பிரிவு சாதாரண சிப்பாய் கேடி விமந்த

வௌ்ளி பதக்கம் 71கிகி எடைப்பிரிவு சாதாரண சிப்பாய் எச்ஏஎச் ஹபுஆராச்சி