Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 18:58:30 Hours

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவியுடன் யாழ். தலைமையக படையினரால் புதிய வீடு நிர்மாணிப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பரந்த அளவிலான சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து படையினரின் தொழில்முறை நுட்பங்கள் மற்றும் மனித வளத்தை பயன்படுத்தி யாழ். மருதங்கேணி பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு சனிக்கிழமை (10) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, ரிப்பன்களை வெட்டி வீட்டை திறந்து வைத்துடன் சுப வேளையில் வீற்டிக்குள் சென்று பயனாளிகளிடம் சாவியை உரிய முறையில் கையளித்தார். திருமதி துஷிகாந்தன் அஞ்சனா தேவி என்பவருக்கு மேற்படி வீடு வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்து சம்பிரதாயங்களுக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விழாவின் போது, புதிதாக திறக்கப்பட்ட வீடு மற்றும் குடும்பத்திற்கு தேவையான நிவாரண பொதிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களும் வீட்டின் உரிமையாளருக்கு பரிசாக வழங்கப்பட்டன. மேலும், குழந்தைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு அவசியமான உபகரணங்களும் வீட்டு உரிமையாளரின் மகனான பாடசாலை மாணவனு்ககு வழங்கி வைக்கப்பட்து.

553 வது பிரிகேட் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 10 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் இந்த கட்டுமானத்திற்காக தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் திறமையான உழைப்பையும் வழங்கி பங்களித்தனர்.

55வது படைப் பிரிவுத் தளபதி, 553வது பிரிகேட் தளபதி , சிரேஸ்ட அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிர்மாண பணிகளுக்காக பங்களித்த படையினர் ஆகியோர் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர்.