08th April 2023 20:35:02 Hours
இலங்கை வில்வித்தை சங்கமும் இலங்கை கடற்படையும் இணைந்து தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் புதன்கிழமை மற்றும் வியாழன் (2023) இணைந்து நடத்திய 21 வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் – 2023 (ஏப்ரல் 05 & 06) இல் இலங்கை இராணுவ வில்வித்தை வீரர்கள் 3 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
20 க்கும் மேற்பட்ட வில்வித்தை சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முப்படையின் வில்லாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். இராணுவ வில்லாளர்களின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் பின்வருமாறு:
ஆண்கள் கலவை - தங்கப் பதக்கம்
கோப்ரல் ஏ.ஏ.எஸ்.வசந்த குமார – 7 வது இலங்கை சிங்க படையணி
ஆண்களுக்கான 70 மீட்டர் குழுப் போட்டி - தங்கப் பதக்கம்
சார்ஜென்ட் எம்.ஏ.ஏ நெரஞ்சன் - 14 வது கஜபா படையணி
கோப்ரல் பி.ஏ.என் வசந்த குமார – 9 வது கெமுனு ஹேவா படையணி
சிப்பாய் எச்.ஏ.எஸ்.எல். விஜேசிறி – 11 வது இலங்கை சமிக்ஞை படையணி
70 மீட்டர் கலப்பு குழு போட்டி - தங்கப் பதக்கம்
கோப்ரல் பி.ஏ.என் வசந்த குமார – 9 வது கெமுனு ஹேவா படையணி
சிப்பாய் எச்.ஜீ.சி.பீ கஜநாயக்க – 5 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி
ஆண்கள் 70 மீட்டர் - வெள்ளிப் பதக்கம்
சிப்பாய் எச்.ஏ.எஸ்.எல் விஜேசிறி – 11 வது இலங்கை சமிக்ஞை படையணி
ஆண்கள் 70 மீட்டர் - வெள்ளிப் பதக்கம்
கெப்டன் எச்.கே.ஐ பெரேரா (ஓய்வு)
ஆண்கள் கலவை - வெண்கலப் பதக்கம்
லான்ஸ் கோப்ரல் எம்.டி கலப்பத்தி – 11 வது இலங்கை சிங்க படையணி