Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2020 19:44:53 Hours

தேசிய போர் வீரர் தினத்தில் 14,617 இராணுவ படை வீரர்களுக்கு வரலாற்று பதவி உயர்வு

முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லையில் உள்ள தேசிய போர் வீரர்களின் நினைவுத்தூபி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை 19 ஆம் திகதி....

இராணுவ படை வீரர்கள் நீண்ட கால தாமதமாக மற்றும் தேக்கமாக காணப்பட்டதும் மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதுமான பதவி உயர்வுகளை வழங்குவது, அயராத, அர்ப்பணிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான தற்போதைய தேசிய சேவைகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாகவும், மேலும் இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், உலகளாவிய தொற்றுநோய்கள், இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி அரசு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போதெல்லாம் நாட்டிற்காக அர்ப்பணித்த அவர்களின் பதவியுயர்த்தும் முகமாகவும் இந்த திட்டத்தின் பின்னணியில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உந்துசக்தியாகவுள்ளார்.

அதன்படி, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ ஆளனி நிருவாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடிர் சிசிர பிலப்பிட்டிய அவர்களின் தலைமையிலான இராணுவ ஆளனி நிருவாக பணிப்பகத்தின் வழிகாட்டுதல்களின் பிரகாரம் லெப்டினன்ட் ஜெனரல் சவிந்திர சில்வா அவர்களின் முயற்சியினால் தேசிய போர் வீர்ர்களின் தேசிய தினத்தன்று 2020 மே 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பதவி உயர்வுகளாக இருக்கும் விதமாக அனைத்து படைப் பிரிவுகளிலுமுள்ள ஏனைய படை வீரர்கள் அவர்களின் அடுத்த தரமுயர்விட்கு பதவியுயர்த்தப்படவுள்ளனர். இராணுவத் தளபதியவர்களினால் எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவாக, கடந்த ஆண்டு 70 ஆவது இராணுவ ஆண்டுவிழா (ஒக்டோபர் 10) தினத்தன்று 210 அதிகாரிகள் உட்பட 7210 இற்கும் மேற்பட்ட ஏனைய படையினர் தங்களது அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டனர் என்பதையும் இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது. இந்த மைல்கல் கட்டத்தில் இராணுவத் தளபதி நாடு முழுவதும் பணியாற்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார். (முடிவு) Running Sneakers Store | UK Trainer News & Releases