Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2019 13:25:22 Hours

தேசிய படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நிகழ்வுகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி வி ரவிப்பிரிய அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரகேடியர் ஏ எஸ் ஹேவாபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் நஜீவ எதிரிசிங்க அவர்களது தலைமையில் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரண ஏற்பாட்டுடன் தேசிய படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன்.

தேசிய படை வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வானது கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தளபதி, 57 , 571 ஆவது படைத் தளபதிகளின் பங்களிப்புடனும், 11 அதிகாரிகள் , 51 படை வீரர்கள் மற்றும் 162 பொதுமக்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

முதலாவதாக பாரதிபுரத்திலுள்ள பெப்டிஷ்ட் கிறிஸ்த்தவ தேவாலயத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் பங்களிப்புடன் தேசிய ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு விஷேட ஆராதனை பூஜைகள் இடம்பெற்றன.

மேலும் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு 1 ஆவது சிங்கப் படையணியினால் 18 ஆம் திகதி கோரகன்கட்டு பிள்ளையார் கோயிலில் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட பூஜை நிகழ்வில் 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஆர் ஏ ஜே என் ரணசிங்க, 1 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி உட்பட 40 படை வீரர்கள் மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த 70 பொது மக்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பூரண ஏற்பாட்டில் இம் மாதம் (17) ஆம் திகதி இஸ்லாலம் ஜூம்மா பள்ளிவாசலில் ஆசிர்வாத பிறார்த்தனைகள் இடம்பெற்றது. அச்சந்தர்ப்பத்தில் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் நஜீவ எதிரிசிங்க அவர்களது தலைமையில் 11 அதிகாரிகள், 60 படை வீரர்கள் மற்றும் 130 இஸ்லாமிய பக்தர்கள் கலந்து கொண்டனர்.latest Nike release | Air Jordan Release Dates 2020