37 வது சிரேஷ்ட தேசிய படகோட்டல் சாம்பியன்ஷிப் - 2022 தியவன்னாவ படகோட்டல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் ஏழு தங்கப் பதக்கங்களுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை இலங்கை இராணுவ படகோட்டல் வீரர்கள் வெற்றிக் கொண்டனர்.
இலங்கையின் பொழுதுபோக்கு படகோட்டல் சங்கம் ஏற்பாடு செய்த மூன்று நாள் படகோட்டல் போட்டியில் முப்படைகள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய 12 உயர்மட்ட அணிகள் போட்டியிட்டன. அன்றைய இறுதிப் போட்டி இராணுவம் மற்றும் கடற்படை அணிகளுக்கிடையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இடம்பெற்ற 10 போட்டிகளில் இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் 7 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இராணுவ படகோட்டுதல் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அனைத்து படகோட்டிகளுக்கும் மிகவும் தேவையான வழிகாட்டல் மற்றும் உத்வேகத்தை வழங்கினார். இறுதி போட்டியை காண இராணுவ படகு குழுவின் உப தலைவர் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அங்கு வருகை தந்திருந்தார்.