Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 19:11:38 Hours

தேசிய படகோட்டல் சாம்பியன்ஷிப் 2024 போட்டிகளில் இராணுவ படகோட்டல் குழுவினர் வெற்றி

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய படகோட்டல் சாம்பியன்ஷிப் இலங்கை இராணுவ படகோட்டல் வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பைப் பெற்றனர்.

ஒட்டுமொத்த போட்டியின் போது, அவர்கள் 10 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 01 வெண்கலப் பதக்கம் பெற்று, 2024 ஏப்ரல் 03 முதல் 05 வரை தியவன்னாவை படகோட்டுதல் மையத்தில் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர். இலங்கை படகோட்டல் குழுவினால் ஏற்பாடு செய்த இந்த மூன்று நாள் நிகழ்வில் முப்படைகள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசலை குழுக்கள் இடையே போட்டி நிலவியது.

இராணுவ படகோட்டல் குழுவின் தலைவர் மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபீஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி இப் போட்டியின் இறுதி நிகழ்வை கண்டுகளித்தார்.

இராணுவப் போட்டியாளர்கள் தாங்கள் பங்குபற்றிய 10 போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க சாதனைகள் பின்வருமாறு:

ஆண்கள் திறந்த பிரிவு

திறந்த ஆண்கள் ஒற்றை ஸ்கல் – 1ம் இடம்

திறந்த ஆண்கள் இரட்டை ஸ்கல் - 1ம் இடம்

திறந்த ஆண்கள் ஜோடி - 1ம் இடம் மற்றும் 3ம் இடம்

திறந்த ஆண்கள் குவாட்ரூபிள் ஸ்கல் – 1ம் இடம்

இடைநிலை ஆண்கள் பிரிவு

இடைநிலை ஆண்கள் ஜோடி – 2ம் இடம்

இடைநிலை ஆண்கள் காக்ஸ்லெஸ் நான்கு – 2ம் இடம்

இடைநிலை ஆண்கள் குவாட்ரூபிள் ஸ்கல் – 1ம் இடம்

திறந்த பெண்கள் பிரிவு

திறந்த பெண்கள் ஒற்றை ஸ்கல் – 1ம் இடம்

திறந்த பெண்களுக்கான இரட்டை ஸ்கல் – 1ம் இடம்

திறந்த பெண்கள் ஜோடி - 2ம் இடம்

ஓபன் மகளிர் குவாட்ரூபிள் ஸ்கல் – 1ம் இடம்

இடைநிலை பெண்கள் பிரிவு

இடைநிலை பெண்கள் இரட்டை ஸ்கல் – 1ம் இடம்

இடைநிலை பெண்கள் ஜோடி – 1ம் இடம்

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை இராணுவம் வென்றது

திறந்த ஆண்கள் பிரிவு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வெற்றி

திறந்த பெண்கள் பிரிவு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வெற்றி

இடைநிலை பெண்கள் சாம்பியன்ஷிப் வெற்றி