Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2017 22:45:33 Hours

தேசிய தெங்கு செய்கை நிகழ்ச்சி திட்டத்திற்கு இராணுவத்தினரது ஒத்துழைப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தற்பொழுது தெங்கு பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்தமையால் அதனை ஊக்குவிக்கும் முகமாக தெங்கு உற்பத்தி செய்கை சபையினால் (CCB) இராணுவத்தின் உதவியை பெறுவதற்காக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வேண்டுகோளையிட்டு இராணுவ தளபதியினால் இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு இராணுவ விவசாய கால்நடை பணிப்பகம், யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு ஆலோசனை விடுக்கப்பட்டது.

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பக ஒத்துழைப்புடன்; வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள 24 இராணுவ அதிகாரிகளுக்கு ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஐந்தாம் திகதி வரை வாரியபொலவில் அமைந்துள்ள தெங்கு பயிர்ச் செய்கை சபையினால் பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Buy Sneakers | UK Trainer News & Releases