Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2021 08:00:00 Hours

தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழுவினால் மனித வள மற்றும் மனிதாபிமான சட்டம் சம்பந்தமான பயிற்சி பட்டறை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு நவம்பர் 23 முதல் 24 வரை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பாளர் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதிநிதி பிரிகேடியர் ஜாக் லெமே (ஓய்வு), திரு. கிளாடியா மற்றும் திரு.சன்னா ஜெயவர்தன ஆகியோர் இணைந்து இரண்டு நாள் பயிற்சி பட்டறையை நடத்தினர், இது மனித உரிமை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தொடர்பான அறிவை மேலும் விரிவுபடுத்தவும் மற்றும் இடைவெளிகளை குறைக்கவும் பங்கேற்பாளர்களுக்கு உதவியது. யாழ் குடாநாட்டில் சேவையாற்றும் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் இந்த அமர்வுகளில் கலந்து கொண்டனர்.

பயிற்சி பட்டறையின் போது பிரிகேடியர் ஜாக் லெமே (ஓய்வு) மற்றும் அவரது அறிஞர்கள் குழு சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அதன் வரலாற்று பரிணாமம், சர்வதேச சட்ட அமைப்பு அறிமுகம் செய்து அதன் அடிப்படை சட்டம் மற்றும் வரையறைகள், வழிமுறைகள் போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். போர் முறைகள், ஆயுத மோதலில் குறிவைத்தல் சர்வதேச மனித உரிமைச் சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கு இடையிலான அடிப்டை கோட்பாடுகள், சட்ட அமுலாக்க அதிகாரங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டம் & அமைதி காக்கும் செயல்பாடுகள், மோதலின் பிந்திய சர்வதேச மனிதாபிமான சட்டம், கட்டளை பொறுப்பு, மற்றும் நடைமுறை பயன்பாடு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டன.

இராணுவத்தின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டப் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைந்து யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத்கொடிதுவாக்கு அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

செயலமர்வின் நிறைவின் போது, யாழ் பாதுகாப்புப் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன அவர்கள் செயலமர்வுக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி ஐசிஆர்சி குழுவினருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.