பீபா உலகக் கோப்பைக்கான பூர்வாங்க தகுதிகான் எச் குழு இரண்டாம் சுற்று போட்டிகளில் பங்கேற்பதற்காக இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை தேசிய காற்பந்து அணி நேற்று மாலை (31) தென் கொரியாவுக்கு புறப்பட்டது.
முதல் போட்டியாக இலங்கை லெபனானை எதிர்த்தாடும் போட்டி ஜூன் மாதம் 5 ஆம் திகதி 1130 மணிக்கும் இரண்டாவது போட்டி கொரியா குடியரசுடன் ஜூன் மாதம் 9 ஆம் திகதி 1630 மணிக்கும் கோயாங் நகரத்தின் கோயாங் மைதானத்தில் நடைபெறும். கடந்த சில வாரங்களில் நாட்டின் சிறந்தவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகளின் ஊடாக சிறந்த அணியினை உருவாக்கம் மீது கவனம் செலுத்தப்பட்டது. இந்த அணியில் இலங்கை இராணுவ காற்பந்து அணியின் (டிபெண்டர்ஸ் எப்சி) 4 வீரர்கள் உள்ளடங்கலாக 22 பேர் கொண்ட சிறந்த அணி தேர்ந்தெடுக்கப்பட்டது.
கஜபா படையணியின் கோப்ரல் ஆர்.ஏ.சி மதுஷன், இலங்கை இராணுவ உபகரண படையின் லான்ஸ் கோப்ரல் ஏ.ஏ.எஸ்.ஆர் அப்புஹாமி, இலங்கை தேசிய பாதுகாவல் படையின் லான்ஸ் கோப்ரல் எம்.ஏ. ராகுமான் மற்றும் கஜபா படையணியின் சிப்பாய் எம்.ஜே.ஆர் முகமது ஆகியோர் தென் கொரியா செல்லும் அணியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கோப்ரல் ஆர்.ஏ.சி மதுஷன் (சதுரங்க மதுஷன்) முன்னதாக 2016 ஆம் ஆண்டில் தேசிய அணியில் உறுப்பினராக இருந்தார், மேலும் சூப்பர் லீக்கின் போட்டிகளில் மத்திய தடுத்தாடும் வீரராக திறமையை காட்டியமையால் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார். லான்ஸ் கோப்ரல் அப்புஹாமி (ரோஷான் அப்புஹாமி) 2012 முதல் டிபெண்டர்ஸ் எப்சி அணியின் முழு இடது தடுத்தாடும் வீரர் ஆவார். இவர் மேலும் 2015 - 2016 வரை தேசிய அணியின் உறுப்பினராக இருந்தவர்.
லான்ஸ் கார்போரல் ரஹுமன் (ஆஷிகூர் ராகுமான்) 2014 முதல் தனது செயல்திறனுடன் தேசிய அணியின் வழக்கமான உறுப்பினராக இருந்து வருகிறார், அதே ஆண்டு முதல் டிபென்டர்ஸ் எப்சியின் ஒரு முக்கிய வீரராக இருந்து தடுத்தல் மற்றும் மத்திய வீரராக இரண்டிலும் விளையாடக்கூடியவர்.
திறமையான இளம் முன்னனி வீரரான சிப்பாய் மொஹமட் (ரிப்கான் மொஹமட்) மிக சமீபத்தில் (2020) இராணுவ காற்பந்து அணியில் சேர்ந்தவர். அவர் 2019 இல் சிறந்த வீரராக தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.