Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2021 09:30:07 Hours

தேசிய கயிறு இழுத்தல் போட்டியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்

தேசிய கயிறு இழுத்தல் சங்கம் ஏற்பாடு செய்த 16 வது தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப்-2021 போட்டிகள் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஆண்கள்/பெண்கள் பிரிவுகளின் கீழ் 37 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் சார்பில் போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

மேலும், இலங்கை இராணுவத்தின் 7 அணிகளும் சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு கீழ்வரும் வெற்றிகளுடன் இவ்வருடத்திற்கான சாம்பியன்ஷிப்பையும் வெற்றிகொண்டனர்.

23 வயதிற்கு கீழ் பெண்கள் பிரிவு – இரண்டாம் இடம்

23 வயதிற்கு கீழ் ஆண்கள் பிரிவு– சாம்பியன்ஷிப்

560 கிகி (பெண்கள்) - சாம்பியன்ஷிப்

640 கிகி (ஆண்கள்) - சாம்பியன்ஷிப்

திறந்த சுற்று (ஆண்கள்) - சாம்பியன்ஷிப்

திறந்த சுற்று (பெண்கள்) - சாம்பியன்ஷிப்

முதலாம் படையின் தளபதியும் இராணுவ தடகள குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுடன் பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு, பிரிகேடியர் பிரியந்த நவரத்ன, கேணல தம்மிக்க திலகரத்ன மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டு வீரர்களை வெற்றிபெறச் செய்வதற்கான ஊக்குவிப்புக்களை வழங்கியிருந்தனர்.