Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th September 2023 19:16:18 Hours

தேசிய ஆண்கள் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவம் வெற்றி

பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் ஓகஸ்ட் 27 முதல் 29 வரை ஒலிம்பிக் ஜூடோ சங்கத்தின் அனுசரணையுடன், இலங்கை ஜூடோ சங்கம் ஏற்பாடு செய்த தேசிய புதியவர்களுக்கான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் ஜூடோ அணி சாம்பியன்ஷிப்பை சுவீகரித்துள்ளது.

இந்தப் போட்டியில் 35 ஜூடோ சங்கங்களைச் சேர்ந்த 308 வீரர்கள் போட்டியிட்டனர். சாம்பியன்ஷிப்பின் போது, இராணுவ ஆண்கள் அணி 53 புள்ளிகளுடன் 06 தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றதுடன், விக்கிரமபாகு விளையாட்டுக் கழகம் 02 தங்கம், 02 வெள்ளி மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களுடன் 17 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அதேநேரம், இலங்கை விமானப்படையின் மகளிர் அணி, மகளிர் பிரிவில் 05 தங்கம், 02 வெள்ளி மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை பெற்று 34 புள்ளிகளுடன் சாம்பியனாகவும், ரஜரட்ட விளையாட்டுக் கழகம் 02 வெள்ளிப் பதக்கங்களுடன் மகளிர் பிரிவில் 06 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

பரிசழிப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை ஜூடோ சங்கத்தின் தலைவர் விங் கமாண்டர் மஞ்சுள வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டதுடன், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.