Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தேசிய அணி சம்பியன்ஷிப்பில் இராணுவ நீச்சல் வீரர்கள் வெற்றி

தேசிய 10 கி.மீ திறந்த நீர் நீச்சல் சம்பியன்ஷிப் 3 வது போட்டியானது - 2020 ஞாயிற்றுக்கிழமை காலை (26) ஆம் திதகி காலை காலி கடற்கரை முன்புறத்தில் இடம்பெற்றன.

இப் போட்டியில் இராணுவ நீச்சல் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 20 ஆண்கள் மற்றும் 5 மகளிர் நீச்சல் போட்டியாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த ஆண்டின் சம்பியன்ஷிப் போட்டியில் அவர்களின் திறமைக்கு ஏற்ப 7 இராணுவ ஆண் நீச்சல் வீரர்கள் மற்றும் 4 மகளிர் முதல் 10 பேர்கள் போட்டியிட முடிந்தது. அதன்படி ஆண் மற்றும் பெண் அணிகள் ஒட்டுமொத்த சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில், நீச்சல் வீரர்களின் பதக்கங்களின் விபரம் பின்வருமறு

வெள்ளி பதக்கம் - 3 ஆவது இராணுவ சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் டபில்யூ விமல் குமார

வெண்கல பதக்கம் - 2 ஆவது (தொண்டர்) மின்சார இயந்திர பொறியியலாளர் படையணியின் சாதாரன வீரர் டபில்யூ.எம்.பி.எல் அபேரத்ன

மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் இலங்கை இராணுவ நீர்வாழ் விளையாட்டுக் குழுவின் தற்போதைய தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.Nike air jordan Sneakers | Nike Shoes