Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th December 2021 18:50:14 Hours

தெலுல்ல பகுதியின் கஞ்சா பயிர்செய்கை படையினரால் சுற்றிவளைப்பு

12வது படைப்பிரிவின் கீழுள்ள 121 வது பிரிகேடின் 20வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்கள் வியாழக்கிழமை (2) தெலுல்ல, எதிலிவெவ பொதுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு கஞ்சா செய்கை பரப்புக்களை சோதனையிட்டதில் 2500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிக்கப்பட்டது.

படையினர் வழங்கிய தகவலுக்குகமை குறித்த பகுதிக்கு வருகைத் தந்த குடா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் அப்பதியை பொறுப்பேற்ற பின்னர் 12 அங்குல உயரம் கொண்ட சுமார் 1500 மரக்கன்றுகளையும் 2 அடி உயரம் கொண்ட 1000 மரக்கன்றுகளையும் படையினர் அழித்தனர்.

121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.யு.என்.சேரசிங்கவின் பணிப்புரையின் பேரில் 20வது இலங்கை சிங்கப் படையிணியின் கட்டளை அதிகாரி மேஜர் யு.ஏ.திலகசிறி அவர்களால் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.