Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2021 14:00:18 Hours

தெற்கில் உள்ள சமூக சேவையாளரினால் மற்றொரு குடும்பத்திற்கு வீடு வழங்கள்

யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிவக்கு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அப்படைத் தலைமையகத்தின் படையினர் இமயன் உடுப்பிட்டியில் வசிக்கும் வறிய குடும்பத்திற்கான மற்றொரு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

உடுப்பிட்டியில் உள்ள திருமதி செல்வசன்னதி தர்ஷனிக்கு புதிய வீட்டிற்கான நிதி உதவியை திரு குமார வீரசூரிய மற்றும் அவரது உறவினர்கள் வழங்கியதன் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்படடன.

வரிய குடும்பத்திற்காக இவ்வாறு கட்டப்பட்ட புதிய வீடு திங்கள்கிழமை (18) அவர்களுக்கு வீட்டின் உபயோகப் பொருட்களின் கையளிப்பு விழாவில் யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, 55 வது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன,மற்றும் நன்கொடையாளர் திரு குமார வீரசூரிய இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.

551வது படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்கள் மூலம் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டது. பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நலம் விரும்பிகள் வீட்டின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.