30th October 2017 20:20:19 Hours
தெரண லிட்டில் ஹாட் எனும் சிறுவர்களுக்கான இதய மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான வைத்தியசாலை அமைக்கும் திட்டத்திற்கு உதவும் முகமாக கடந்த சனிக் கிழமை (29) ஒழுங்கு செய்யப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியில் இராணுவப் படையினர் பங்கேற்றனர்.
இப் போட்டியானது பௌத்தா லோக மாவதை , டீ எஸ் சேனாநாயக்க சந்தி , வாட் பிலேஸ் , தாமரைத் தடாகம், சி டபிள்யூ டபிள்யூ கண்ணங்கரா மாவதை போன்ற வீதிகளினுடாகச் சென்று சுதந்திர சதுக்கத்தில் முடிவடைந்தது.
இம் மரதன் ஓட்டப் போட்டியில் பெண்களுக்கான முதலாம் இடத்தை இலங்கை இராணுவப் மகளிர்ப் படையணியின் வீராங்கனை கோப்பிரல் என் ஜி ராஜசேகர பெற்றதுடன் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் வீராங்கனையான சார்ஜன்ட் கே ஜி ஆர் சமன் குமார அவர்களும் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இலங்கை இராணுவ 7ஆவது மகளிர்ப் படையணியின் சதாரன படை வீராங்கனை யூ கே என் ரத்நாயக்க மற்றும் இலங்கை இராணுவ 6ஆவது மகளிர்ப் படையணியின்(தொண்டர்) சதாரன படை வீராங்கனை யூ வீ கே மதுரிகா போன்றௌர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
அந்த வகையில் ஆண்களுக்கான பிரிவில் இலங்கை பீரங்கிப் படையணியின் சதாரணப் படைவீரர் கே சம்முகேஷ்வரன் மற்றும் கே ஜயசிங்க போன்றௌர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
Running sports | Nike Off-White