Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2021 15:03:05 Hours

தென் சூடான் சிறிமெட் 2 ம் மட்ட வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் தீவிர மருத்துவ நடவடிக்கைகளில்

தென் சூடான் இலங்கை சிறிமெட் 2 ம் மட்ட வைத்தியசாலையானது முழு உபகரணங்களுடனான இரு வான்வழி கிகிச்சை குழுக்கள், ஒரு மருத்துவக் குழு மற்றும் தென் சூடான் போரில் அவசர சிகிச்சை சத்திர சிகிச்சை நிலையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் கடந்த நவம்பர் மாதத்தில் போரிலிருந்து ஜூபா வரைக்கும் ஐந்து நோயாளிகளும் இருவர் சிகிச்கைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த அவசர அறுவை சிகிச்சை நிலையங்கள், மோசமாக பாதிப்படைந்த கொவிட்-19 நோய் தொற்றாளர்களை பராமரித்துவருகின்றன.

தென் சூடானில் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்னர், கொழும்பில் உள்ள ஒரு இராணுவ வைத்தியசாலையில் இலங்கை இராணுவ மருத்துவப் படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றில் தகுதிவாய்ந்த தீவிர சிகிச்சை நிபுணர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் சிறிமெட் 2 ம் மட்ட மருத்துவ அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பரா மருத்துவர்களுக்கு வான்வழி மருத்துவ நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.