13th August 2021 17:00:33 Hours
லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கை தூதுவர், மேதகு, திருமதி ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன திங்கள் (9) அன்று லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்டெபனோ டெல் அவர்களின் அழைப்பை ஏற்று லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக நிலைகொண்டுள்ள இலங்கை படையின் முகாமின் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார்.
மேலும், குறித்த அமர்வின் போது இரு பிரதிநிதிகளும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், அந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் சிரேஸ்ட அதிகாரி மற்றும் இலங்கை தூதருக்கு இடையே நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
போர்களுக்குப் பிறகு, தூதர் மற்றும் இராணுவ அதிகாரி இருவரும் கிரீன்ஹில்லில் உள்ள 12 வது இலங்கை படை பாதுகாப்பு நிறுவனத்தைப் பார்வையிட்டனர். இதன் போது தூதுவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டதுடன், இலங்கையின் ஐ,நா அமைதிகாக்கும் குழுக்களின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சுஜீவ படகல்ல மற்றும் ஏனைய அதிகாரிகளினால் அன்புடன் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து படையினருக்கு உரையாற்றிய தூதுவர் அமைதி காக்கும் கடமைகளை நடத்துதல் மற்றும் வீரர்கள் தொடர்பான விடயங்கள் குறித்து ஒரு அன்பான கலந்துரையாடலை நடத்தினார். லெபனானில் ஐநா அமைதிகாக்கும் பணிகளை முன்னெடுக்கும் இலங்கை இராணுவத்தின் தற்போதைய அமைதி காக்கும் பணிகள் பெரிதும் பாராட்டத்தக்க வகையில் உள்ளதெனவும் தெரிவித்தார்.
இறுதியாக, இலங்கைப் படைகளின் கட்டளை அதிகாரி தூதுவருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்கி வைத்தார். அதனையடுத்து லெபனான் தளபதிக்கு இரவு உணவு விருந்துபசாத்துக்கும் அழைக்கப்பட்டார்.