09th November 2023 20:54:13 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட்பிரிகேட்டின் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஏற்பாட்டில், திங்கட்கிழமை (6 நவம்பர்) தம்பிலுவில் மத்திய கல்லூரியிலும், திருக்கோவில் மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுத்தல் என்ற தலைப்பில் விரிவுரை நடாத்தப்பட்டது.
செயலமர்வில் இரு பாடசாலைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரி திரு எம்.எம்.பீ.பி.எம் ரஷாத் அவர்களினால் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது. விரிவுரையானது பாதகமான விளைவுகள், சட்டவிரோதமான பொருட்கள், ஆபத்தான போதை மருந்துகளின் வகைகள் மற்றும் அத்தகைய பயன்பாடுகளில் பின்விளைவுகளின் தாக்கம் குறித்து கவனம் செலுத்தியது.
கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி அவர்களின் கருத்திற்கமைய, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 242 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கே.பீ.எல் அமுனுபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஈ.டி.எஸ்.கே தெனியாய ஆகியோர் இந் நிகழ்ச்சித் திட்டத்தை மேற்பார்வையிட்டனர்.