Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 14:00:16 Hours

திருக்கோவில் பாடசாலை ஆரம்ப நிகழ்வினை முன்னிட்டு சிப்பாயிகளால் சிரமதானம்

242 வது பிரிகேடின் கீழ் உள்ள 8 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள காஞ்சிரங்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் திங்கட்கிழமை (25) ‘சிரமதான’ பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாடசாலை திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு மாகாண கல்வி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளுக்கமைய 24 வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவாவின் பணிப்புரையின் பேரில் 242 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திக பீரிஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.