Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2023 18:10:46 Hours

திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலையில் ‘வெசாக்’ கொண்டாட்டம்

திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலை படையினர் ‘வெசாக்’ தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (மே 05) இராணுவ வழங்கல் பாடசாலை தளபதி பிரிகேடியர் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டீஎம்சீ எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

திருகோணமலை சீனக்குடா ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் பிரதமகுருவான வண. அலுத்ஓய சத்தாதிஸ்ஸ தேரரினால் போதி பூஜை நிகழ்ச்சியும் அதன் பின்னர் படையினருக்கான விசேட சொற்பொழிவும் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த போர்வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

ஆக்கப்பூர்வமான வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களால் மாலை பிரகாசமானது. பொது மக்களுக்காக இராணுவ வழங்கல் பாடசாலையின் படையினரால் கொண்டைக்கடலை தானமும் வழங்கப்பட்டது.

பாடசாலையின் தளபதி, சிரேஷ்ட அதிகாரி, அதிகாரிகள், மாணவ அதிகாரிகள், சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.