22nd October 2021 14:50:46 Hours
திருகோணமலை இராணுவ வழங்கல் பயிற்சி பாடசாலையில் (ASL) 72 வது இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு இராணுவத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி இராணுவக் கொடியை ஏற்றப்பட்டு இராணுவத் தளபதியின் சிறப்பு செய்தி வாசிக்கப்பட்டது.
இராணுவ வழங்கல் பயிற்சி பாடசாலையின் தளபதியான பிரிகேடியர் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே. ஜெயசேகர பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன் சிரேஷ்ட பயிற்றுநர்கள், கல்விசார் உறுப்பினர்கள், நிரந்தர பணியாளர்கள், பயிற்சி அதிகாரிகள், பாடநெறி பங்கேற்பாளர்கள் மற்றும் சிப்பாய்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இராணுவப் வழங்கல் பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற 15 அதிகாரவாணையற்ற அதிகாரிகள், பயிற்சி பாடசாலையின் தளபதியினால் அடுத்த நிலைக்கான நிலையுயர்வு சின்னம் அணிவிக்கப்பட்து. 72 வது இராணுவ ஆண்டு விழாவிற்கு மேலும் முக்கியத்துவத்தையும் கொடுக்கும் வகையில் பயிற்சி பாடசாலையின் தளபதி தனது பணியாளர்களுடன் வளாகத்தில் மாங்கன்றுகளை நாட்டினார்.
இந்நிகழ்வுக்கு இணையாக ஒரு விசேட சமூக நிகழ்வாக 3 ஆம் நூற்றாண்டில் மகாசேன மன்னரால் கட்டுவிக்கப்பட்ட பெரும் வரலாற்று மற்றும் கலாசார பெறுமதியைக் கொண்ட திருகோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன கோகண்ண ரஜமஹா விகாரையின் புனரமைப்புக்கு இராணுவப் வழங்கல் பயிற்சி பாடசாலை தனது பங்களிப்பை வழங்கியது.