Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2023 16:11:32 Hours

தியத்தலாவ கல்வியற் கல்லூரி முகாமைத்துவ சபை மாநாட்டில் பதவி நிலைப்பிரதானி

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் நிர்வாக மற்றும் பயிற்சி பொறிமுறையை மீளாய்வு செய்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் வடிவமைக்கப்பட்ட முகாமைத்துவ சபையின் இரண்டாவது மாநாடு தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட இராணுவ நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க 2023 செப்டம்பர் 22 அன்று இடம்பெற்றது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி, பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர், பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர், ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர், ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிலவல் அதிகாரிகள் பிரிவின் கட்டளை அதிகாரியும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானி அவர்களுக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அவர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் போர் நினைவுத் தூபியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

முகாமைத்துவ சபை மாநாட்டில் பொது நிர்வாக மற்றும் வழங்கல் துறைகள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தியதுடன், சவால்களை சமாளிக்கும் சிறந்த தீர்வுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அன்றைய தின நினைவாக அனைத்து முகாமைத்துவ சபை உறுப்பினர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.

முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் வளாகத்தின் முன்னேற்றங்களைக் பார்வையிட முகாமில் கள விஜயம் செய்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கல்வியற் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் கல்வியற் கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டுப்புத்தகத்தில் சில பாராட்டுக்களை எழுதினார்.