Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2021 17:17:36 Hours

தியதலாவையில் அதிகாரிகள் உணவறைக்கான அடிக்கல் நாட்டு விழா

தியதலாவை இராணுவ தள வைத்திசாலையின் புதிய அதிகாரிகள் உணவறைக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கலினை மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே புதன்கிழமை (5) நாட்டிவைத்தார்.

'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் சுபவேளையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இதன் போது பாதுகாப்புப் படை தலைமையக தளபதிக்கு வைத்தியசாலை நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிகழ்வில் தியதலாவை வைத்தியசாலையின் சிரேஸ்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.