Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

திகன, கெங்கல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்

இந்த அனார்த்தத்தில் பாதிக்கப்பட்ட இடங்களான கண்டி பிரதேசத்தில் திகன, அக்குரன, கலஹா, கட்டுகஸ்தொட்ட, மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிட்டிய, மற்றும் பல பகுதிகளில் பெறுமதியான சொத்து இடங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல் கண்டி மகியங்கனை; பிரதேசத்தின் பாதையின் இரு பக்கமும் சேதமடைந்த வீடுகள் மற்றும் கடைகள் பள்ளிவாசல்களை புனரமைக்கும் பணியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்கள் மிகவும் சிரமத்தின் சவால்களின் மத்தியில் கடந்த (16) ஆம் திகதி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் முதல் கட்ட நடவடிக்ககையாக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களினால் ஏற்பாட்டில் 11ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்சங்க ரனவன இவர்களின் ஆலோசனைக்கு அமைய திகன நகரம் தொடக்கம் கெங்கல்ல பிரதேசம் வரை கி.மீ 05 துாரம் வரை பாதையை புனரமைக்கும் பணிகளில் இராணுவ அதிகாரிகள் மற்றும் 250க்கும் அதிக படையினர்கள் நியமிக்கப்பட்டு இருபுறமும் சேதப்படுத்திய இடங்களின் குப்பைகள் அகற்றி புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

சிலநாட்கள் முன்பு இப் பிரதேசத்தின் மத தலைவர்களுடன் இணைந்து மதிப்புக்குரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்திய ரத்ன மற்றும் பாதுகாப்பு பதிவி நிலை அதிகாரியான அத்மிரால் ரவிந்ர சீ விஜேகுனரத்தன மற்றும் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களால் கிடைக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இப் பணிகளை மேற்கொண்டன.

இதற்கமைய மத்திய பாதுகாப்பு படைத்லைமையகத்தின் படையினர்களால் இப் பிரதேசத்தின் சமய மதகுருமார்கள் மற்றும் குண்டசாலை பிரதேச சபை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இப் பணிகளில் ஈடுபட்டன.

Running Sneakers Store | New Releases Nike