Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2021 18:00:01 Hours

தளபதி லீக் டீ - 20 கிரிக்கெட் ஆரம்பம்

இராணுவத் தளபதி டி 20 லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது சுற்று மிகவும் திறமையான மற்றும் விவேகமான வீரர்களின் பங்கேற்பு மற்றும் கழகங்களாக போட்டிகளில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக தொம்பகொடவிலுள்ள இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சர்வதேச தரத்திலான இராணுவ விளையாட்டு மைதானத்தில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி வியாழக்கிழமை (29) நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இராணுவ கிரிக்கெட் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க மற்றும் இராணுவ கிரிக்கெட் குழுவின் பிரதி தலைவரும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, ஆகியோர் தலைமையில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இராணுவத்திற்குள் கிரிக்கெட் விளையாட்டுக் கட்டமைப்பினை தரமுயர்த்துவதற்கும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் உந்து சக்தியாகவிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய புதிய கருவிகளுடன் கூடியதாக காணப்படும் சாலியபுர கஜபா படையணியின் கிரிக்கெட் மைதானத்தில் சீரற்ற காலநிலை காணப்படும் வேளைகளிலும் போட்டிகளை நடத்தகூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

04 அணிகள் கொண்ட போட்டி தொடரில் இராணுவத்தால் உருவாக்கப்பட்ட தேசிய அணி வீரர்கள் தலைமையில் தலா 03 பேர் வீதம் 04 அணிகளில் தேசிய வீரர்கள் 12 பேர் போட்டிகளில் பங்குபற்றுவர். இந்த போட்டிகள் திறமையான வீரர்களை ஈர்க்கும் வகையிலும் அவர்களது அனுபவங்களை மேம்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும் என்பதோடு வீரர்களின் மன உறுதியை பலப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும் என என மேஜர் ஜெனரல் வணசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

அதன்படி, இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட தேசிய வீரர் சீக்குக்கே பிரசன்ன தலைமையிலான இராணுவ நொதர்ன் வோரியர்ஸ் அணியில் மிலிந்த சிறிவர்தன, அஷான் பிரியஞ்சன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் இராணுத்தினரால் உருவாக்கப்பட்ட தேசிய வீரரான அசேல குணரத்ன தலைமையிலான ஈஸ்டர்ன் வோரியர்ஸ் அணியில் சந்துன் வீரக்கொடி, சத்துரங்க டி சில்வா ஆகியோரும் இராணுவ லஹிரு மதுசங்க தலைமையிலான சதர்ன் வோரியர்ஸ் இராணுவத்தின் தேசிய வீரரான லஹிரு மதுசங்க தலைமையிலான அணியில் தினேஷ் சந்திமால், தம்மிக பிரசாத், சுரங்க லக்மல் மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகியோரும் இராணுவத்தின் தேசிய வீரர் திசார பெரேரா தலைமையிலான வெஸ்டன் வோரியஸ் அணியில் உபுல் தரங்க, நுவன் பிரதீப் மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோரும் இந்த போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டி - 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள ஒவ்வொரு அணியும் மூன்று அணிகளுடன் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளதோடு ஒவ்வொரு அணியிலும் 2 தேசிய வீரர்களுடன் இராணுவ தேசிய வீரர்கள் விளையாடலாம் என்ற நிபத்னையும் காணப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் 23 வயதிற்குட்பட்ட இரண்டு வீரர்கள் இராணுவத்தில் இருந்து பங்கேற்க முடியும் என்றும் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க தெரிவித்தார்.

இராணுவ கிரிக்கெட் போட்டிகள் 1951 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தன. அதன் கீழ் இராணுவ அணிகள் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றன, அப்போதைய இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மற்றும் 1963 ஆம் ஆண்டில் நடத்திய முதல் “டெய்லி நிவூஸ்” சாம்பியன்ஷிப்பை இராணுவ அணி வென்றது. அதன் பிறகு, இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட பிரிகேடியர் (கலாநிதி) எச்.ஐ.கே. பெர்னாண்டோ மற்றும் மோதலுக்குப் பிந்திய காலப்பகுதியிலான வீர்ர்களான அஜந்த மெண்டிஸ், அதிகார ஆணையற்ற அதிகாரி செக்குக்கே பிரசன்ன, அதிகார ஆணையற்ற அதிகாரி II அசேல குணரத்ன மற்றும் சமீபத்தில் இலங்கை தேசிய வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இராணுவத்தின் கிரிக்கெட் துறையை உயர்த்துவதற்காக இப்போது இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 2004 ஆம் ஆண்டில், இராணுவ அணி “சாரா ட்ரோபி” சாம்பியன்ஷிப்பை வென்றது. பிரீமியர் ட்ரை பி இல் விளையாடியது மற்றும் 2009 இல் அதன் சாம்பியன்ஷிப்பாக மாறியது. பின்னர் 2011/2012 முதல் பிரீமியர் ட்ரை ஏ இல் சூப்பர் எட்டு அணியாகவும் முதல் வகுப்பு கிரிக்கெட் அணி. அவர்கள் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே உள்ளக கழங்களுக்கிடையிலான டி - 20 போட்டிகளில் சாம்பியன்களாகவும், 23 வயதிற்குட்பட்ட சாம்பியன்களாகவும் உருவெடுத்தனர். தற்போது இலங்கை இராணுவத்தை சேர்ந்த 5 ஆண்கள் மற்றும் 7 பெண் வீராங்கணைகள் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.