Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2022 00:21:38 Hours

தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இணைந்து மென்பானம் விநியோகம்

வெள்ளிக்கிழமை (4) நடைபெறவுள்ள 74வது சுதந்திர தின விழாவின் இறுதி ஒத்திகையில் கலந்து கொண்டவர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களினால் தொடர்ந்து ஆறாவது நாளாக வரையறுக்கப்பட்ட தனியார் சன்குயிக் லங்கா நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பியோ டேல் நிறுவனம் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இன்று (3) காலை மென்பானங்கள் மற்றும் ஏனைய உணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டன.

திருமதி சுஜீவா நெல்சன் அந்த மென்பானம் மற்றும் உணவுப் பொதிகளை விநியோகித்ததுடன் அணிவகுப்பின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக் கொண்ட பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அங்கு வந்து முப்படையினருடன் உரையாடியதுடன் பெண் சிப்பாய்கள், சிவில் பாதுகாப்பு துறை மற்றும் தேசிய மாணவ சிப்பாய் படையணி , மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர்களுடன் சில எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். இதன் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகிய இருவரும் அவர்களுடன் சுதந்திரமாகப் பேசியதுடன், இந்த மாபெரும் தேசியக் அணிவருப்பு காட்சியை நடத்துவது குறித்து தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவு 74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகையில் பங்கேற்கும் முப்படை வீரர்கள், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு படை, தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி உறுப்பினர்கள் மற்றும் அனைவரின் நலன்சார்ந்த அம்சங்கள் குறித்து அக்கறை கொண்டு வரையறுக்கப்பட்ட தனியார் சன்குயிக் லங்கா நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பியோ டேல் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் அனுசரணையுடன் இராணுவத் தளபதியின் ஒருங்கிணைப்புடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஜனவரி 29 அன்று மென்பான பொதிகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்தனர்.

கடந்த சில நாட்களாக இந்த ஏற்பாடுகளுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் துஷார பாலசூரிய உட்பட சில சிரேஷ்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.