20th August 2021 06:37:28 Hours
இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் போரில் உயிர் நீத்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாணத்திலுள்ள போரில் உயிர் நீத்த மற்றும் காயமடைந்த போர் வீரர்களின் குடும்ப்ஙகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் சனிக்கிழமை (14) வழங்கி வைக்கப்பட்டன. இத்திட்டதிற்கான நிதி உதவி படையினர் விவகார பணிப்பகம் மற்றும் மேற்படி வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் படையணிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய அனுராதபுரம் மெதிரிகிரிய பகுதிகளிலுள்ள மஹாஇலுப்பல்லம, சமணலபுர, இச்சன்குளம் சிப்புகுளம் மற்றும் ஹிங்குரகொட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளை வழங்கி வைப்பதற்காக சனிக்கிழமை (14) நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் சிறப்பு விருந்தினராக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களும் கலந்து கொண்டதோடு, குறித்த படையணிகளின் படைத் தளபதிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளும் முறையாக சுகாதார ஒழுங்கு விதிகளை கடைப்பிடித்து குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மஹாஇலுப்பல்லம சமணலபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவி 1997 ஆம் ஆண்டில் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற ரோந்து நடவடிக்கைளின் போது உயிர் நீத்த போர் வீரரான இலங்கை சிங்கப் படையின் லான்ஸ் கோப்ரல் எம்.எம்.பீ.கே. விஜேசூரியவின் மகளான திருமதி ஹசினி செவ்வந்திகா விஜேசூரியவிடம் பிரதம விருந்தினரால் கையளிக்கப்பட்டதோடு, குறித்த நிகழ்வுக்கு வருகைத் தந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு மத அனுட்டாங்களுக்கு மத்தியில் வெற்றிலை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டதோடு ரிப்பன்களை வெட்டி பயனாளி குடும்பத்திற்கான வீட்டை திறந்து வைத்தார். அதே நேரத்தில் வீட்டின் பெயர் பலகையும் இராணுவ தளபதியால் திறந்து வைக்கப்பட்டதோடு, பால் பொங்கும் நிகழ்வும் இடம்பெற்றதை தொடர்ந்து தளபதி போர் வீரரின் மனைவி மற்றும் மகளுடன் கலந்துரையாடினார். பின்னர் நிகழ்வின் சிறப்பு விருந்தினர் திருமதி சுஜீவா நெல்சன் அவர்களோடு இணைந்து புதிய வீட்டை பெற்றுகொண்டவர்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வைத்தார்.
மேற்படி வீட்டின் நிர்மாண பணிகள் 16 வது இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் 16 வது இலங்கை சிங்கப் படை சிப்பாய்களின் தொழில்நுட்ப உதவியுடனும், 1.5 மில்லியன் செலவில் புதிய வீட்டின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கப்பட்டன. இராணுவ தளபதியின் வழிகாட்டலுக்கமைய படையினர் விவகார பணிப்பகம் மற்றும் இலங்கை சிங்கப்படை தலைமையகத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீட்டை கையளிக்கும் நிகழ்விற்கு வருகை தந்த தளபதிக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்கப்படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து சக்கர நாற்காலியில் இருக்கும் காயமடைந்த போர்வீரரான அனுராதபுரம் இச்சன்குளத்தில் வசிக்கும் சார்ஜன்ட ஆர்வீபி புஸ்பகுமார அவர்களுகான புதிய வீட்டை வழங்கி வைக்கும் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, சிறப்பு படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் நிசங்க இரியாகம மற்றும் காயமடைந்த நிலையிலிருக்கும் போர் வீரர் ஆகியோரால தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவி நிகழ்வின் பிரதம விருந்திரான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் பயனாளியான சார்ஜண்ட் ஆர்விபி புஷ்பகுமாரவின் குடும்பத்தாருக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, விஷேட படையின் போர் வீரரான பயனாளி இராணுவ தளபதிக்கு வெற்றிலை வழங்கி வரவேற்பளித்ததார். அதே சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் இணைந்து வீட்டுப் பயன்பாட்டிற்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை பயனாளி குடும்பத்தாருக்கு வழங்கி வைத்தார்.
காயமடைந்த போர் வீரர் சார்ஜன் ஆர்வீபி புஸ்பகுமார 2009 ஆம் ஆண்டில் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் போதான துப்பாக்கிச்சூட்டில் பெரிதும் காயமடைந்திருந்த நிலையில் அவருடைய விதவை தாயாருடன் வசிப்பதால் அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கி வைக்கப்பட்டது.
கொவிட் -19 தொற்றுநோய் பரவலால் பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் சிறப்பு படையின் நிலையத் தளபதி மற்றும் தலைமையக கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு படையின் சிப்பாய்களால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், படைப்பிரிவு தளபதிகள் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், மாவட்ட அரச அதிகாரிகள் மற்றும் நிர்மாணத்திற்கு பங்களிப்புச் செய்தோர், நான்கு பயனாளி குடும்பங்களினதும் உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் சிப்பாய்கள் திறப்பு விழா நிகழ்வில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி கலந்துகொண்டனர்.