05th November 2021 16:02:33 Hours
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா புதன்கிழமை (3) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த போது, யாழப்பாணம் சுண்ணாகம் பகுதியில் வசிக்கும் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருக்காக 51 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நன்கொடையாளரான திரு தியாகேந்திரன் வாமதேவன் அவர்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டமானது 51 வது படைப் பிரிவின் 10 வது இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவ உதவியுடன் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேற்படி சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதோடு, 24 ஜூன் 2021 அன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர். இருப்பினும் அவரது பெற்றோர் உயிருடன் இல்லாத காணரத்தால் அவரது ஒரே சகோதரியுடன் தற்காலிமான இருப்பிடமொன்றி வசிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருந்தார். இது தொடர்பில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 51 வது படைப்பிரிவின் கீழ் வீட்டின் நிர்மாண பணிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
விடுதலை புலிகளின் நாட்டை பிளவு படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதி கட்ட போராட்டத்தின் போது மிக கடுமையான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த விடுதலை புலிகள் அமைப்பின் குறித்த முனானாள் போராளியான பயனாளியுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டின் அடிக்கலினையும் நாட்டி வைத்தார் .
கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் குழுவுடன் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்தில் நடத்திய உரையாடலின் விளைவாகவே இந்த வீடு நிர்மாணத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு மேற்படி சந்திப்பு இடம்பெற்ற வேளையில் முன்னாள் போராளிகளுக்கான எதிர்கால தேவைகளுக்காகவும் வாழ்வாதார உதவிகள் அவசியப்படுகின்ற வேளைகளிலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தளபதி அறிவுறுத்தியிருந்தார்.
அதற்கமை புனர்வாழ்வளிக்கப்பட்ட பயனாளி தனக்கும் தனது சகோதரிக்கும் சொந்த வீடு இல்லாததால் வாழ்வாதார உதவிக்காக இராணுவத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 4 ஆண்டுகளில் (2018 - 2021) 51 வது பிரிவின் தலைமைத்தினால் இப்பகுதியில் உள்ள அநாதரவான குடும்பங்களுக்காக 45 புதிய வீடுகளை நிர்மாணித்துகொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 புதிய வீடுகள் படைப் பிரிவு தளபதி, பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின், மேற்பார்வையின் கீழ் இன்னும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.