Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2021 06:44:00 Hours

தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் இரத்த தானம்

தேசிய தலசீமியா நிலையத்தின் வேண்டு கோளின் பேரில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமா ஜெனரல ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முன்னனி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தில சேவையாற்றும் 270 க்கும் மேற்பட்ட படையினர் செவ்வாய்க்கிழமை (31) பனகொட ஸ்ரீ போதிராஜராமாயாவில் இரத்த தானம் செய்தனர்.

இரத்த தானம் செய்யும் இடத்தின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக திடீர் விஜயம் செய்த ஜெனரல் சவேந்திர சில்வா அங்கு இரத்த தானம் செய்தவர்களிடனும் இரத்த சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மருத்துவ ஊழியர்களுடனும் எண்ணங்களைப் பகிர்ந்துக்கொண்டார்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 14 வது படைப்பிரிவின் தளபதி, பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இரத்த வங்கியின் களஞ்சியத்தை நிரப்புவதற்கான முழு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நாரஹேன்பிட்டிய தேசிய இரத்த வங்கி, ராகம பிராந்திய இரத்த வங்கி, களுத்துறை பிராந்திய இரத்த வங்கி ஆகியவற்றினது பணியாளர்கள் சில இராணுவ மருத்துவ ஊழியர்கள் மற்றும் தாதியர்களுடன் இந்த நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனாரத் யாபா, இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இராணுவத் தளபதியின் விஜயத்தின் போது அங்கிருந்தனர்.