01st June 2023 21:05:31 Hours
2023 ஜூன் 1 ம் திகதி 24வது இராணுவத் தளபதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பதவியேற்று முதலாவது ஆண்டு நிறைவாகின்றது. அவரின் கட்டளை மற்றும் தலைமையானது இலங்கை இராணுவத்தின் வளர்ச்சிக்கு முற்போக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்கள், வீரர்களின் நலன், வளம் மற்றும் நிதி முகாமைத்துவ உத்திகளை மேம்படுத்துதல், இராணுவ அமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் போன்ற பல துறைகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வையானது, இராணுவத்தினரின் திறனை மேன்மேலும் மேம்படுத்துவதற்கு விவசாய உற்பத்தித்திறன் மற்றும் அனர்த் முகாமைத்துவத்திற்கு செயலாக்கத்துடன் பங்களிக்க உதவியுள்ளது. மேலும், பல டிஜிட்டல் மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இராணுவத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இதனால் வளங்களின் சிக்கனமான பயன்பாட்டை நோக்கி நிறுவனம் இயங்குகின்றது.
இன்று (1) காலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இராணுவத் தளபதி அலுவலகத்தில் மத நிகழ்வுகளான ஆசிர்வாதம் வழங்கல் மற்றும் 'செத்பிரித்' பராயண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கோட்டை ரஜ மஹா விஹாரையின் பிரதமகுரு வண. அலுத்நுவர அனுருத்த நாயக்க தேரர் தலைமையில் மகா சங்கத்தினர் சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டனர்.பௌத்த தேரர்களுக்கு 'பிரிகர' (தானம்) மற்றும் 'கிலான்பச' (உணவு) போன்றன வழங்கப்பட்டன.
முதலாம் ஆண்டு நிறைவு நாளுக்கு மேலும் பெறுமதியையும் மனிதாபிமானத்தையும் சேர்க்கும் வகையில் இராணுவத் தளபதி, திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண் சிப்பாய்களுக்கு 35 போஷாக்கு பொதிகளை விநியோகித்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு விருந்துக்கு அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். பின்னர் இராணுவத் தளபதி பெண் சிப்பாய்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், அவர்களின் நலன் மற்றும் குடும்பக் விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இந் நிகழ்ச்சிகளில் பிரதம பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.