22nd July 2021 15:45:20 Hours
இலங்கை இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளரும் இலங்கை பொறியியலாளர் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர 7 வது கள பொறியியலாளர் படையின் படையினரால் மேற்கொள்ளப்படும் தம்பிட்டிய மகா ஓயா துப்பாக்கி சூட்டு தளத்திற்கான வீதி கட்டுமானத் திட்டத்தினை பார்வையிடுவதற்கான களப்பயணத்தினை வெ ள்ளிக்கிழமை (16) மேற்கொண்டார்.
கட்டுமானத்திற்கான வழிக்காட்டலகளை வழங்குவதற்கு முன்பதாக திட்டத்தின் முன்னேற்றம் குறித்து 7 வது கள பொறியியலாளர் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜே.எல்.என் சில்வாவுடன் கலந்துரையாடப்பட்டது.
அதன்பிறகு, ஜனாதிபதியின் கமசமக பிலிசந்தரக் எனும் திட்டத்தின் கீழ் 7 வது கள பொறியியல் படை மற்றும் 12வது (தொ) பொறியியல் சேவைப் படையினரால் ஹிங்குராங்கொட ரஜரட்ட வித்தியாலய விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் மற்றும் நூலகக் கட்டடத்தின் கட்டுமானத்தை ஆய்வு செய்தனர் . பின்னர் 12 (தொ) பொறியியல் சேவைப் படையினரால் பொலன்னருவை ரோயல் கல்லூரியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் சனிக்கிழமை (17) கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 7 வது கள பொறியியல் படையினால் செய்யப்படுகிற மஹவெலிதென்ன மனிதாபிமான மரியாதைக்குரிய தளத்திற்கு களப்பயணம் மேற்கொண்டார்.
7 கள பொறியியலாளர் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜே.எல்.என் சில்வா மற்றும் தள அதிகாரி கெப்டன் டி.எம்.எஸ்.கே திசாநாயக்க இப்பகுதியில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் பணிகள் குறித்து விளக்கினர்.