22nd May 2023 16:20:03 Hours
அம்பாறையில் உள்ள போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை மேம்பாட்டுப் பாடநெறி-எண் 44 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (மே 20) இடம்பெற்றது.
இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, 54 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத காலப் பயிற்சியைப் பின்பற்றினர்.
இப் பாடநெறியில் இலங்கை சிங்க படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி I எசிபிஎடிஆர் பண்டார சிறந்த மாணவராக விருது பெற்றார்.
இந் நிகழ்வில் போர்ப் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.