30th April 2024 19:45:59 Hours
கொழும்பு 07 இல் அமைந்துள்ள தர்ஸ்டன் கல்லூரி 2024 ஏப்ரல் 29 ஆம் திகதி பழைய மாணவரான இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கு பாராட்டு விழாவை நடாத்தியது.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை அதிபர் திரு. பிரமுதித்த விக்கிரமசிங்க, ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பிரதான நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றனர். கல்லூரியின் விகாரையில் வழிப்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் போர்வீரர் நினைவுத் தூபியில் மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் மேலைத்தேய பேண்ட குழுவினரின் இசையுடன் பாடசாலை மாணவ சிப்பாய் படையினரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
கல்லூரிப் பாடல் இசைக்கப்பட்டதுடன், மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. பழைய மாணவர் திரு. அருணசாந்த வரவேற்புரையை நடத்தினார். அதிபர் திரு. பிரமுதித்த விக்கிரமசிங்க, பாராட்டு விழாவின் நோக்கம் மற்றும் மதிப்பிற்குரிய தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ அவர்களின் நியமனத்தின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கினார். பின்னர், கல்லூரி மாணவர் ஒருவர் சிரேஷ்ட அதிகாரியின் சுயவிவரத்தை பார்வையாளர்களுக்கு வாசித்தார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ அவர்கள் தனது உரையில், ‘தமசோ மா ஜோதிர்கமயா’ (இருளிலிருந்து வெளிச்சத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்) என்ற நேசத்துக்குரிய பொன்மொழியுடன் பின்னிப்பிணைந்த ஏக்கம் நிறைந்த நினைவுகளைத் தூண்டி, கல்லூரியில் தனது கால்லூரிக் காலத்தை நினைவுகூர்ந்தார். தர்ஸ்டன் கல்லூரி வழங்கிய விரிவான கல்விக்கு நன்றி தெரிவித்த அவர், தேசத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கல்லூரியின் போர்வீரர்களின் சேவைகள் மற்றும் தியாகங்களை கௌரவித்தார்.
பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், பங்குபற்றிய அனைத்து முக்கியஸ்தர்களுடனான குழுபடம் எடுத்தலுடன் நிகழ்வு நிறைவுற்றது.
முப்படைகளின் சேவையிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற பழைய மாணவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.